சுரேஷ் சாலேவை கைது செய்வதற்கு விசாரணை தீவிரம்! உண்மையை கூறுவாரா இனியபாரதி
2019 இல் இலங்கையை உலுக்கிய உயிர்த்த ஞாயிறுதாக்குதல் தொடர்பிலான விசாரணைகள் தற்போது சூடுப்பிடித்துள்ளது.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் கைது செய்யபட்டதை தொடர்ந்து அவரின் சகாக்களும் கைது செய்யபட்டுள்ளனர்.
பிள்ளையானிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் பல விடயங்கள் வெளிவந்துள்ளதாக கூறப்படுகின்றது.
எனினும் இந்த விவகாரத்தில் முன்னாள் புலனாய்வுத்துறை அதிகாரி சுரேஸ்சாலேவின் பெயர் கூறப்பட்டாலும் அவரை இன்னும் ஏன் அரசாங்கம் கைது செய்யவோ, விசாரணை நடத்தவோ இல்லையென்ற கேள்வியும் எழும்புகின்றது.
இந்த நிலையில், 2018 செப்டெம்பர் மாதமளவில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபாயவின் வாசஸ்தலத்தில் சுரேஸ் சாலே ஒரு முக்கிய சந்திப்பினை முன்னெடுத்ததாகவும் அதில் இனிய பாரதி உட்பட்ட மூவரும், அசாத் மௌலானா, மற்றும் முன்னாள் ஓய்வுபெற்ற தேசிய புலனாய்வுப்பிரிவின் தலைவராக இருந்த மேஜர் ஜெனரல் கபில ஆகியோர் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி....



