ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் சமந்தா பவர் வழங்கிய உறுதிமொழி
இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக யுஎஸ்எய்ட் (USAID) நிறுவனத்தின் நிர்வாகி சமந்தா பவர் உறுதியளித்துள்ளார்.
நியூயோர்க்கில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்பின் போது, சமந்தா பவர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் பற்றிய சுருக்கமான விளக்கமொன்றை ஜனாதிபதி அளித்துள்ளார்.
ஊழல் ஒழிப்புச் சட்டம்
அதேவேளை, அதன் வெற்றிகரமான முடிவிற்கு அரசாங்கத்தின் அர்ப்பணிப்பையும் அவர் எடுத்துரைத்தார்.
ஊழல் ஒழிப்புச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு தற்போது முறையான பயிற்சியுடன் ஊழியர்களை இணைக்கும் பணி மேற்கொள்ளப்படுவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இந்தச் சூழ்நிலையில், ஊழல் தடுப்புச் சட்டத்தின் எதிர்பார்க்கப்படும் விளைவுகளை அடைய கூடுதலாக ஒரு வருடம் தேவைப்படும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே இந்த செயல்திட்டங்களுக்கு ஆதரவை வழங்குமாறு ஜனாதிபதி, சமந்தா பவரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.