கூட்டமைப்பின் முன்னாள் எம்.பி துரைரெட்ணசிங்கம் அவர்களின் உடல் தகனம் செய்யப்பட்டது!
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர்காமத்தம்பி துரைரெட்ணசிங்கம் அவர்களின் இறுதி கிரிகைகள் திருகோணமலை இந்து மயானத்தில் இன்று மதியம் நடைபெற்றது.
கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த அவர் கந்தளாய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.
அவரது சடலம் இந்து மயானத்திற்கு எடுத்து வரப்பட்டு தகனம் செய்யப்பட்டது. திருகோணமலை மாவட்டம், கொட்டியாபுரப்பற்றின் சேனையூரைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் 1941.01.04.இல் பிறந்தார்.
மெதடிஸ்த மிசன் தமிழ்க் கலவன் பாடசாலை, மூதூர் புனித அந்தோனியார் பாடசாலை ஆகியவற்றில் கல்வி பயின்று பின்னர் மட்டக்களப்பு ஆசிரியப் பயிற்சிக் கலாசாலையில் ஆசிரியர் பயிற்சி பெற்றார்.
1960 ஆம் ஆண்டு முதல் பல பாடசாலைகளில் பணியாற்றிய பின்னர் 1982 இல் சேனையூர் மத்திய கல்லூரியின் பிரதி அதிபராகவும், இறுதியாக அதிபராகப் பதவி உயர்வு பெற்று பணியாற்றிவந்தார். பின்னர் கொத்தணி அதிபராகவும் கடமையாற்றியுள்ளார்.
1998 இல் திருகோணமலை பிராந்தியக் கல்வித் திணைக்களத்தில் உதவி கல்விப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டு பின்னர் தம்பலகாமம் கோட்டக் கல்வி அதிகாரியாகப் பணியாற்றி கல்வித்துறையில் இருந்து இளைப்பாறினார்.
துரைரெட்ணசிங்கம் அவர்கள் 2001 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாகப் திருகோணமலை தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டார். எனினும், அவர் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகவில்லை.
ஆனாலும், ததேகூ தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் மு. சிவசிதம்பரம் மரணமடைந்ததைத் தொடர்ந்து அவருக்குப் பதிலாக 2002 யூன் மாதத்தில் நாடாளுமன்றத்துக்கு தெரிவுசெய்யப்பட்டார்.
திருகோணமலைத் தேர்தல் தொகுதியில் 2004 ஆம் ஆண்டில் மீளவும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தனிப்பட்ட காரணங்களுக்காக 2010 தேர்தல்களில் இவர் போட்டியிடவில்லை.
பின்னர் 2015 நாடாளுமன்றத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகவில்லை. பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
அதேவேளையில் தமிழரசுக்கட்சியின் திருகோணமலை மாவட்ட குழுதலைவராக பணியாற்றிய இவர் இறுதிவரை தமிழரசுக் கட்சியின் உபதலைவராகவும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.





புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam

போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri
