நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் - இன்றைய வானிலை
இலங்கையின் இன்றைய வானிலையில் பிற்பகல் ஒரு மணிக்கு பின்னர் பெரும்பாலான பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் எதிா்வுகூறியுள்ளது.
தென், சப்ரகமுவ, மத்திய, ஊவா , வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும்.
இதேவேளை கடற்பகுதியில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறை வரையான கடற்பரப்பில் காற்று வடக்கு திசையில் வீசுவதுடன் நாட்டைச் சுற்றியுள்ள கடற்பரப்புகளில் காற்று 15- 25 கிலோமீற்றா் வேகத்தில் வீசும் என கூறப்பட்டுள்ளது.
காங்கேசன் துறையில் இருந்து திருகோணமலை வரையிலான கடற்பகுதியிலும் காலி முதல்
ஹம்பாந்தோட்ட வரையிலான கடற்பகுதியிலும் காற்றின் வேகம் 35-45 கிலோமீற்றா்
வேகத்தில் வீசும் என்று வானிலை மையம் எதிர்வு கூறியுள்ளது.
