3 பெண்களை கழுத்தை நெரித்து படுகொலை செய்த நபர் கைது
குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மூன்று பெண்களை கழுத்தை நெரித்து படுகொலை செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
எல்பிட்டிய - அவிட்டாவ பகுதியில் மூன்று பெண்களை கழுத்தை நெரித்து படுகொலை செய்துள்ளதுடன் அவர்களின் சொத்துக்களையும் குறிப்பிட்ட நபர் கொள்ளையடித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பொலிஸார் மேலதிக விசாரணை
குறிப்பிட்ட நபர் யகிரல பிரதேசத்தை சேர்ந்த 34 வயதுடையவர் எனவும், அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது திருடப்பட்ட தங்க நெக்லஸ், 03 ஜோடி காதணிகள் மற்றும் கையடக்கத் தொலைபேசி என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபரிடம் பொலிஸார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சந்தேகநபருக்கு எதிராக மத்துகம, களுத்துறை மற்றும் அல்பிட்டி நீதவான் நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

Super Singer: Duet Round சுற்றில் நடுவர்களை வியக்க வைத்த போட்டியாளர்கள்- இறுதி நடந்த குழப்பம் Manithan
