ஹட்டன் - கண்டி பிரதான வீதியில் திடீரென தீப்பற்றி எரிந்த முச்சக்கரவண்டி
ஹட்டன் - கண்டி பிரதான வீதியில் பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த தீ விபத்து இன்று புதன்கிழமை(23) காலை இடம்பெற்றுள்ளது.
ஹட்டனிலிருந்து கண்டி நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றே தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காரணம் கண்டறியப்படவில்லை
தீ விபத்தின் போது முச்சக்கரவண்டியில் மூன்று பேர் பயணித்துள்ள நிலையில் அவர்களுக்கு எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் கூறியுள்ளனர்.
பிரதேசவாசிகள் மற்றும் வீதியில் பயணித்த ஏனைய வாகனங்களின் சாரதிகள் இணைந்து தீ பரவலை கட்டுப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறிருப்பினும் முச்சக்கரவண்டி தீயில் முழுவதுமாக எரிந்து நாசமாகியுள்ளது.
தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என ஹட்டன் பொலிஸார் மேலும் கூறியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




விஜய் டிவியின் தங்கமகள் சீரியலில் மாற்றப்பட்ட முக்கிய நடிகை.. அவருக்கு பதில் இவர்தானா, போட்டோ இதோ Cineulagam
