கட்டுநாயக்க விமான நிலையத்தில் வர்த்தகர் உட்பட இருவர் கைது!
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வர்த்தகர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது இன்று (23) அதிகாலை விமான நிலைய சுங்க அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளுடன் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
இதன்போது, கண்டி , பேராதனை பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞனும் கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய வர்த்தகருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் இருவரும் துபாயிலிருந்து இன்றைய தினம் அதிகாலை 05.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இதன்போது, விமான நிலைய சுங்க அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர்கள் கொண்டு வந்த பயணப்பொதிகளிலிருந்து ஒரு கோடியே 15 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான 77,000 வெளிநாட்டு சிகரெட் அடங்கிய 385 சிகரெட் கார்ட்டூன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

viral video: சிறுவனின் மடியில் ஒய்யாரமாக ஓய்வெடுக்கும் ராட்சத மலைப்பாம்பு! மெய்சிலிர்க்கும் காட்சி Manithan

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri

தனக்கு இப்படி நடந்தது எப்படி, அதனை கண்டுபிடித்த ஆனந்தி.. சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
