தேசபந்துவுக்கு எதிரான விசாரணைக்குழுவுக்கு உறுப்பினர்களை பெயரிட கோரிக்கை
பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு(Deshabandu Tennakoon) எதிரான விசாரணைக்குழுவுக்கு உறுப்பினர்களைப் பெயரிடுமாறு சபாநாயகர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அரசியலமைப்பின் பிரகாரம் குறித்த குழுவுக்கு பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் தலா ஒரு உறுப்பினரை நியமிக்க வேண்டும்.
சபாநாயகர் கோரிக்கை
எனினும் பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் இதுவரை தங்கள் சார்பில் எவரையும் முன்மொழியவில்லை.

அதன் காரணமாக குறித்த விசாரணைக்குழுவுக்கு தங்கள் சார்பில் உறுப்பினர்களை முன்மொழியுமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன வேண்டுகோள் விடுத்துள்ளார்.
குறித்த விசாரணைக்குழுவின் தலைவராக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் செயற்படவுள்ளார்.
இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 20 மணி நேரம் முன்
2016ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த கொடி, காஷ்மோரா.. மொத்த பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam