தலைக்கவசத்தால் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்ட பாடசாலை மாணவன்.. 11 பேர் கைது
பாடசாலை மாணவன் ஒருவரை தலைக்கவசத்தால் அடித்துக் கொன்ற சம்பவம் தொடர்பாக 11 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெலகெதர பொலிஸ் பிரிவின் அரேபொல கந்த பகுதியில் நேற்று (22) இரவு இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 15 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள் என்றும், அவர்கள் அரேபொல மற்றும் அம்பகோட் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கூட்டு தாக்குதல்
கடந்த 16 ஆம் திகதி, வெலகெதர பொலிஸ் பிரிவின் ஹவன்பொல பகுதியில், தனிப்பட்ட தகராறு காரணமாக, பலர் சேர்ந்து 16 வயதுடைய ஒரு மாணவனை மற்றும் தலைக்கவசத்தால் தாக்கி படுகாயப்படுத்தியுள்ளனர்.
படுகாயமடைந்த மாணவன் குருநாகல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார்.
இந்நிலையில், சடலம் குருநாகல் மருத்துவமனை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மாவதகம மற்றும் வெலகெதர பொலிஸ் நிலையங்களால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Baakiyalakshmi: தூக்கி வீசப்பட்ட மாமனார் புகைப்படம்! சுதாகருக்கு பாக்கியா விடுத்த எச்சரிக்கை Manithan

viral video: சிறுவனின் மடியில் ஒய்யாரமாக ஓய்வெடுக்கும் ராட்சத மலைப்பாம்பு! மெய்சிலிர்க்கும் காட்சி Manithan
