எரிபொருள் விலை உயர்வு - மற்றுமொரு கட்டண உயர்வு தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
தேசிய கூட்டு முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் எல். ரோஹன பெரேரா எரிபொருள் விலை உயர்வால் முச்சக்கர வண்டிக் கட்டணமும் உயர்த்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை ரூ. 12 அதிகரித்துள்ளதால், இந்தக் கட்டணம் திருத்தியமைக்கப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
எரிபொருள் கட்டுப்பாடுகள்
மேலும், முச்சக்கர வண்டிக் கட்டணத்தை மேற்கு மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து ஆணையமே நிர்ணயிப்பதால், எரிபொருள் விலை உயர்வைக் கருத்தில் கொண்டு, இரண்டாவது கிலோமீட்டருக்கான தற்போதைய ரூ. 90 கட்டணத்தை ரூ. 10 உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தற்போது முதல் கிலோமீட்டருக்கு ரூ. 100 ஆகவும், இரண்டாவது கிலோமீட்டருக்கு ரூ. 90 ஆகவும் கட்டணம் இருப்பதால், இரண்டாவது கிலோமீட்டருக்கான கட்டணத்தை ரூ. 100 ஆக உயர்த்துவது அவசியம் என்றும், அது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
எரிபொருள் கட்டுப்பாடுகள் காரணமாக சக்கர வாகன உரிமையாளர்கள் தங்கள் தொழிலைச் செய்வதில் கடுமையான சிரமங்களை எதிர்கொள்வதால், எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும், வாரத்திற்கு குறைந்தபட்சம் 30 லிட்டர் எரிபொருளாவது வழங்கப்பட என்றும் அவர் கோரியுள்ளார்.
வங்கிக்கணக்குகளை பயன்படுத்துவோர் கவனமாக இருக்குமாறு அவசர அறிவுறுத்தல்..! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
பிரித்தானியாவில் அரிய உயிரியல் நிகழ்வு: இரண்டு தந்தைக்கு பிறந்த இரட்டையர்கள்: எப்படி சாத்தியம்? News Lankasri