பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்
வீதியில் நிறுத்தி வைக்கப்பட்ட முச்சக்கரவண்டி ஒன்று காணாமல் போன சம்பவம் தொடர்பில் கல்முனை பொலிஸ் நிலையம் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமைய பொலிஸ் நிலைய பிரிவிற்குட்பட்ட மாநகர தனியார் வைத்தியசாலைக்கு முன்பாக கடந்த (13) ஆம் திகதி இரவு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பச்சை நிறம் கொண்ட ABI-4194 இலக்கம் உடைய முச்சக்கரவண்டியே காணாமல் போய் உள்ளதாக நேற்று (14) முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.
விசாரணை
குறித்த முறைப்பாட்டிற்கமைய கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அஸாரின் பணிப்புரைக்கமைய கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர் வழிகாட்டலில் கல்முனை குற்றப்புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ் பரிசோதகருமான அலியார் றபீக் தலைமை குழுவினர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் இவ்விடயம் தொடர்பில் 0672229222 என்ற தொலைபேசிக்கு பொதுமக்கள் தொடர்பு கொண்டு தகவல் தெரிந்தால் அறிவிக்குமாறு பொலிஸார் கேட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

ரோஜா ரோஜா பாடல் மூலம் ஒட்டுமொத்த திரையுலகையும் திரும்பிய பார்க்க வைத்த இளைஞன்.. யார் இவர் Cineulagam

அய்யனார் துணை சீரியல் நடிகர் சோழனுக்கு நிஜ வாழ்க்கையில் இப்படியொரு சோகமா?... கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam

குணசேகரன் குறித்து சாமியார் கூறிய உண்மை, அடிக்கச்சென்ற கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
