15 வயது சிறுமியை கொடூரமாக தாக்கி கொலை செய்த 26 வயது இளைஞர் - தந்தை வழங்கிய வாக்குமூலம்
சிறுவர் காப்பகம் ஒன்றில் இருந்து அழைத்துச்சென்று குடும்பம் நடத்திய 15 வயதான சிறுமியை கொடூரமாக தாக்கி கொலை செய்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
கம்பஹா பொது வைத்தியசாலையில் இளைஞரொருவர் சிறுமி ஒருவரை அழைத்து வந்த நிலையில் வைத்தியர்கள் பரிசோதித்த போது சிறுமி ஏற்கனவே உயிரிழந்திருந்தமை தெரியவந்தது.
இதனை தொடர்ந்து சிறுமியின் உடலை வைத்தியசாலையில் ஒப்படைத்து விட்டு தப்பிச் சென்ற 26 வயதான முச்சக்கர வண்டி சாரதியை பொலிஸார் நேற்று கைது செய்தனர்.
முச்சக்கர வண்டி சாரதியை காதலித்த சிறுமி
வெயங்கொடை கட்டுவஸ்கொட பிரசேத்தை சேர்ந்த இலந்தாரி பொடிகே நதிசி பிரியங்கனி தத்சரணி என்ற 15 வது சிறுமியே சம்பவத்தில் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்திருந்தது.
இதனை தொடர்ந்து சிறுமியை அழைத்து வந்த நபர் சிறுமியின் பெற்றோருக்கு அழைப்பை ஏற்படுத்தி தகவல் தெரிவித்துள்ளார்.
இதன்படி, வைத்தியசாலைக்கு வந்த சிறுமியின் பெற்றோர், சிறுமி வெயங்கொடையில் வசிக்கும் குறித்த நபருடன் தானாக முன்வந்து வாழ்ந்து வந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.
தந்தை வழங்கிய வாக்குமூலம்
உயிரிழந்த சிறுமியின் தந்தை இது தொடர்பில் தெரிவிக்கையில், இலந்தாரி பொடிகே நதிசி பிரியங்கனி தத்சரணி எனது மகள். வயது 15. "திருமணம் முடிக்கவில்லை.வயது போதாது.அவரின் விருப்பத்தில் தான் சென்றார்.
முச்சக்கர வண்டி சாரதியை காதலித்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் அவருடன் சென்றுவிட்டார்.பின்னர் பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய இருவரையும் கைது செய்த பொலிஸார் அத்தனகல்ல நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.
எனினும் அவரின் விருப்பத்தில் திரும்பவும் சென்று குறித்த நபருடன் தானாக முன்வந்து வாழ்ந்து வந்ததாக வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 13 மணி நேரம் முன்

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri

ஜாய் கிரிசில்டா பேச்சால் பல கோடி நஷ்டம்.. நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த மாதம்பட்டி ரங்கராஜ் Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
