நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரத்தில் பிரேத பரிசோதனையின் யாருமறியா பயங்கரம்
கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் பயங்கரமான ஒரு சூழ்நிலை ஏற்படுத்துவதற்கான செயற்பாடுகளில் சிலர் ஈடுபட்டுள்ளதாக தற்போது வெளியாகியுள்ள சில செய்திகள் உறுதிப்படுத்தியுள்ளன.
குறித்த சிறைச்சாலையில் ஐந்து பேருக்கிடையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த இரண்டு கைதிகள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எனினும் மோதலுக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை. இது தொடர்பில் குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினரும் சிறை அதிகாரிகளும் முழுமையான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
இந்த சிறைச்சாலை முரண்பாடுகளுக்கு தொடக்கப்புள்ளியாக இருப்பது நீர்கொழும்பு சிறைச்சாலையில் நிகழ்ந்த அந்த மோசமான மோதல் சம்பவமே ஆகும்.
இந்த அசம்பாவிதமான சம்பவங்களை எல்லாம் பார்க்கின்ற பொழுது ஆட்சிக் கவிழ்ப்புக்கான ஒரு பெரும் இனக்கலவரம் அல்லது வன்முறைக்கான சில ஆயத்தங்கள் சிறைச்சாலைக்குள் தயார்படுத்தப்படுகின்றன என்பதே தொடர்ச்சியாகவும் மறைமுகமாகவும் வெளிப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
ஆனால் இந்த சிறைச்சாலைகளுக்குள் இவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுப்பது யார் என்ற கேள்வி இப்போது எழுகின்றது. இது தொடர்பாக விரிவாக ஆராய்கிறது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி..