உயிரிழந்த நிலையில் காயங்களுடன் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்ட சிறுமி! வாகனத்துடன் மாயமான இளைஞர்கள்
கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் நேற்றைய தினம் சிறுமி ஒருவரை சுகயீனம் கூறி ஒப்படைத்த இரு இளைஞர்கள் சிறுமி உயிரிழந்தமையடுத்து உடனடியாக வைத்தியசாலையில் இருந்து காணாமல்போயுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இளைஞர்கள் இருவர் 15 வயதுடைய சிறுமியொருவரை காரில் அழைத்து வந்து சுகயீனம் எனக்கூறி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இதன்போது சிறுமியை உடனடியாக சோதனை செய்த வைத்தியர்கள் சிறுமி எற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்த நிலையில், இளைஞர்கள் இருவரும் திடீரென காணாமல்போயுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளரொருவர் தகவல் தெரிவித்துள்ளார்.
வாகனத்துடன் மாயமான இளைஞர்கள்
குறித்த சிறுமி உயிரிழந்ததை அறிந்ததும், உடனடியாக இளைஞர்கள் காரில் வைத்தியசாலை வளாகத்தை விட்டு வெளியேறியுள்ளமை பாதுகாப்பு கமராவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சம்பவத்தில் உயிரிழந்த சிறுமி சுமார் 15 வயதுடையவர் எனவும், முகத்திலும், உடலிலும் அடிபட்டது போன்று காயங்கள் காணப்படுவதாகவும் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை பொலிஸார் வைத்தியசாலை வளாகத்தின் பாதுகாப்பு கமரா அமைப்பின் உதவியுடன் காருடன் மாயமான இரு இளைஞர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக வைத்தியசாலை அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 13 மணி நேரம் முன்

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

ஜாய் கிரிசில்டா பேச்சால் பல கோடி நஷ்டம்.. நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த மாதம்பட்டி ரங்கராஜ் Cineulagam
