முச்சக்கரவண்டி விபத்து: முன்னாள் இராணுவ வீரர் படுகாயம்
கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மயிலவெவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முன்னால் இராணுவ வீரர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்விபத்து இன்று (17) 1.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் கோமரங்ஙடவல- மதவாச்சி ஜீ.குமார ரத்ன (50வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கோமரங்கடவல பகுதியிலிருந்து முச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த முன்னாள் இராணுவ வீரர் மல்போறுவ பகுதியிலிருந்து டிமோ சிறிய ரக லொறியுடன் மோதியதினாலேயே இவ்விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்துடன் தொடர்புடைய டிமோ சிறிய ரக லொறியின் சாரதியைக் கைது செய்துள்ளதாகவும்
விபத்து தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கோமரங்கடவல பொலிஸார்
தெரிவித்தனர்.

Post office -ன் இந்த 5 சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்தால் FD-யை விட அதிக வட்டியைப் பெறலாம் News Lankasri

Viral Video: கழுகுடன் வானில் பறந்து செல்லும் மீனின் தத்ரூப காட்சி! திரும்ப திரும்ப பார்க்க வைக்கும் காட்சி Manithan
