கொத்மலையில் முச்சக்கர வண்டி விபத்து! மூவர் படுகாயம்
நுவரெலியா - கொத்மலை அருகே நடைபெற்ற முச்சக்கர வண்டி விபத்தொன்றில் மூன்று பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பிலிருந்து நானுஓயா - எடின்பரோ தோட்டத்தை நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று கண்டி - நுவரெலியா வீதியில் பயணித்துக் கொண்டிருந்த போது, பிரதான வீதியை விட்டு விலகி சுமார் 50 அடி பள்ளத்தில் உள்ள தேயிலை தோட்டத்தில் வீழ்ந்து விபத்துக்கு உள்ளாகியது.
கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லபுக்கலை தேயிலை தொழிற்சாலைக்கு அருகில், இன்று(18) மாலை 05 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
வைத்தியசாலையில் அனுமதி
விபத்தில் முச்சக்கர சாரதி உட்பட வண்டியில் பயணித்த மூவர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்த மூவரையும், அப்பகுதி பொதுமக்கள் காப்பாற்றி நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்றிருந்தனர்.
விபத்து தொடர்பான விசாரணையை கொத்மலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். முச்சக்கர வண்டியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டதாக முச்சக்கர வண்டியின் காயமடைந்த சாரதி தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |