முச்சக்கரவண்டிகளில் ஏற்படவுள்ள திடீர் மாற்றம்!
முச்சக்கர வண்டிகளை சில மாற்றங்களுடன் இயக்குவதற்கு மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, முச்சக்கர வண்டிகளை இனிவரும் காலங்களில் தேவையற்ற விதத்தில் அலங்கரிக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
வாகனங்கள் அல்லது பாதசாரிகளுக்கு இடையூறாக அமைக்கப்பட்டுள்ள எந்தவொரு முச்சக்கரவண்டியையும் இயக்க அனுமதி வழங்கப்படாது எனவும், கடுமையான கட்டுப்பாடுகள் நடைமுறைபடுத்தப்படும் எனவும் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் உதவி ஆணையாளர் சுஜீவ தென்னகோன் தெரிவித்துள்ளார்.
எடுக்கப்படவுள்ள நடவடிக்கை
இலங்கையில் பதிவு செய்யப்பட்ட 08 மில்லியன் மொத்த வாகனங்களில் சுமார் 02 மில்லியன் முச்சக்கர வண்டிகளாகும்.
இதன்படி சிறிய மாற்றங்களுடன் முச்சக்கர வண்டிகளை இயக்குவதற்கு மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தீர்மானித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 21ம் நாள் திருவிழா





ரோஹினி அம்மாவை நேரில் சந்தித்த மீனா, க்ரிஷ் செய்ய மறுக்கும் காரியம்... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
