தென்னிலங்கையில் சடலத்துடன் மயானத்திற்கு சென்றவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி
எல்பிட்டிய மயானத்தில் சடலமொன்றுக்கு தீவைக்கச் சென்ற இரு இளைஞர்கள் மற்றும் சுடுகாடு ஊழியர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
காயமடைந்தவர்கள் எல்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எல்பிட்டிய வைத்தியசாலை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நேற்று பிற்பகல் எல்பிட்டிய, பிரதேசத்தை சேர்ந்த நபரின் சடலம் எல்பிட்டிய மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. எனினும் அந்த சந்தர்ப்பத்தில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது. இதனால் ஊழியர்களின் ஆலோசனைக்கமைய காகிதத்தை பயன்படுத்தி சடத்தை எரிப்பதற்கு குறித்த மூவரும் முயற்சித்துள்ளனர்.
இதன் போது தீ வைத்தவர்கள் மீது தீப்பரவியமையினால் அவர்கள் படுகாயமடைந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
மின்சாரம் தடைப்படவில்லை என்றால் ஒரு பொத்தானை அழுத்தி சடலத்தை எரிக்க முடியும். மின்சார தடையால் குறித்த மூவரும் இந்த நிலைமைக்குள்ளாகியுள்ளதாக காயமடைந்தவர்களின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 3 மணி நேரம் முன்

21 வயதில் முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்.., IAS பதவியை மறுத்த காரணம் News Lankasri

நாராயண மூர்த்தியின் இன்ஃபோசிஸ் நிறுவனம் 2025 ஆம் ஆண்டில் Freshersக்கு வழங்கும் சம்பளம் எவ்வளவு? News Lankasri
