யாழில் மூன்று வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து
யாழில் மூன்று வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இச்சம்பவம் நேற்றையதினம் (27) மாலை இடம்பெற்றது.
இவ் விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் பிரவுண் வீதி சந்தியில் முச்சக்கர வண்டியும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துள்ளானதுடன் அதேசமயம் வீதியில் நின்றிருந்த மோட்டார் சைக்கிளொன்றையும் முச்சக்கரவண்டி மோதித் தள்ளியது.
வீதிச்சமிக்ஞை விளக்கு
இந்த விபத்தில் பாரிய சேதங்கள் இல்லாது தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர்.
சம்பவம் தொடர்பான சிசிரிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. மேலும், குறித்த சந்தியில் நாளாந்தம் தொடர்ச்சியாக வாகனங்கள் மோதி விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றது,
ஆகையினால் குறித்த சந்தியில் வீதிச் சமிக்ஞை விளக்கு பொருத்தப்பட வேண்டுமென தொடர்ச்சியாக அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

கறுப்பு ஜூலை 1983ஆம் ஆண்டின் ஆறாவடுவும் தீராத தமிழர் பிரச்சினையும் 4 மணி நேரம் முன்
இரட்டை குழந்தைகளுக்கு தந்தையானார் நடிகர் கவின்.. மகிழ்ச்சியில் வெளியிட்ட பதிவு! குவியும் வாழ்த்துகள் Cineulagam
பிரித்தானியாவில் பெண் காவலரின் பொய் துஷ்பிரயோக குற்றச்சாட்டு: மீண்டும் சிறையில் அடைப்பு News Lankasri
ஹார்முஸ் முடக்கத்தால் தத்தளிக்கும் ஆசிய நாடுகள்... சத்தமின்றி கனடா பக்கம் திரும்பிய ஜப்பான் News Lankasri