யாழில் கஞ்சா கலந்த மாவாவுடன் மூவர் கைது!
யாழ்ப்பாணம் - உடுவில் பகுதியில் மாவா கலந்த கஞ்சாவுடன் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது இன்றையதினம் (15) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உடுவில், நாகம்மாள் கோவில் வீதி பகுதியில் இன்று காலை பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மூவர் கைது
ஒருவர் 200 கிராமுடனும், மற்றையவர் 200 கிராமுடனும் மற்றையவர் 100 கிராம் கஞ்சா கலந்த மாவாவுடனும் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் தற்போது சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்கள்.
விசாரணைகளின் பின்னர் அவர்களை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |