ICC T20 தரவரிசையில் முன்னேறிய இலங்கை வீராங்கனைகள் மூவர்
ICC மகளிர் வளர்ந்து வரும் நாடுகளுக்கான கிண்ணத் தொடரில் இலங்கை வீராங்கனைகள் வெளிப்படுத்திய சிறப்பான ஆட்டத்தின் பலனாக, சமீபத்திய ICC மகளிர் 20 க்கு 20 வீராங்கனைகள் தரவரிசையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் பெற்றுள்ளனர்.
விஷ்மி குணரத்ன, கவிஷா தில்ஹாரி மற்றும் சுகந்திகா குமாரி ஆகியோர் தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளனர்.
இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ள
விஷ்மி குணரத்ன துடுப்பாட்ட வீராங்கனைகளுக்கான தரவரிசையில் 37 இடங்கள் முன்னேறி 51ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.

இந்தத் தொடரில் அதிக ஓட்டங்களைப் பெற்ற வீராங்கனையாகத் திகழும் அவர், 104.66 என்ற சராசரியுடன் 314 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.
இதற்கிடையில், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 38 பந்துகளில் அதிரடியாக 56 ஓட்டங்களைப் பெற்ற இமேஷா துலானி, தரவரிசையில் மூன்று இடங்கள் முன்னேறி 23ஆவது இடத்தைப் பெற்றுள்ளார்.
பந்துவீச்சு தரவரிசையிலும் இலங்கை வீராங்கனைகள் முன்னேற்றம் கண்டுள்ளனர்.
கவிஷா தில்ஹாரி: தொடரில் 13 விக்கெட்டுகளைக் கைப்பற்றி 12ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
சுகந்திகா குமாரி: எட்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றி எட்டு இடங்கள் முன்னேறி 13ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.
இலங்கை அணி இந்த தொடரின் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ள நிலையில், வீராங்கனைகளின் இந்தத் தரவரிசை முன்னேற்றம் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.