அனுராதபுரத்தில் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தண்டனை இடமாற்றம்
ராஜாங்கனை பிரதேசத்தின் பொலிஸ் போக்குவரத்துப் பொறுப்பதிகாரி உட்பட மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் தண்டனை இடமாற்றத்துக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸ் தெரிவிக்கப்படுகிறது
அனுராதபுரம் - ராஜாங்கனையில் இடம்பெற்ற மரநடுகை நிகழ்வின் போது மரநடுகை நிகழ்வின்போது, வருகை தந்த, தனியார் உலங்கு வானூர்தி ஒன்றுக்கு பாதுகாப்புக்காக குறித்த பொலிஸ் அதிகாரிகள் அனுப்பப்பட்டிருந்தனர்.
எனினும் அவர்கள் உலங்கு வானூர்தி பாதுகாப்பு கடமையை புறக்கணித்து மரநடுகை நிகழ்வில் விருந்தனர்களாக பங்கேற்றமை காரணமாகவே இடமாற்றத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
பிரதேச மக்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற குறித்த மர நடுகை நிகழ்ச்சியில் கிராம உத்தியோகத்தர்கள், விவசாய பரிசோதகர்கள் உட்பட அரச உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
முதல்கட்ட விசாரணை
இந்தநிலையில் மரம் நடும் விழாவை ஏற்பாடு செய்தவர்கள் உலங்கு வானூர்தியின் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளை நிகழ்ச்சியில் பங்கேற்க அழைத்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதன்போது உலங்கு வானூர்தி தரையிறங்கிய இடத்தில் இருந்து ஐம்பது மீட்டருக்கும் குறைவான தூரத்தில் மரக்கன்றுகளை இரண்டு காவல்துறை அதிகாரிகள் நட்டுள்ளனர்.
எஞ்சியிருந்த அதிகாரி உலங்கு வானூர்திக்கு அருகில் நின்று அதன் பாதுகாப்பை உறுதி செய்துள்ளனர்.
இதற்கமைய மரநடுகை நிகழ்ச்சியின் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டதையடுத்தே, அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு, அவர்கள் மீது விசாரணைகளும் மேற்கொள்ளப்படுவதாக பொலிஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

குடும்பத்தினருக்கு பேரதிர்ச்சி கொடுக்கும் உண்மையை கூறிய அரசி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு புரொமோ Cineulagam

படங்களில் வில்லன் வாழ்க்கையில் ஹீரோ.. கோட்டா ஶ்ரீனிவாச ராவ் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? Manithan

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam

பிடிவாதத்தால் எதையும் சாதிக்கும் பெண் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகருடன் சிறகடிக்க ஆசை கோமதி பிரியாவிற்கு திருமணம்? யார் அந்த நடிகர் தெரியுமா Cineulagam
