போதைப்பொருள் உற்பத்தி மூலப்பொருட்களை ஏற்றிச்சென்ற வாகனம்! சுற்றிவளைத்த பொலிஸார்
ஐஸ் போதைப்பொருள் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் 7,000 கிலோ மூலப்பொருட்களை கந்தானை பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டதாக சந்தேகிக்கப்படும் டிப்பர் வாகனத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நடவடிக்கை நேற்றைய தினம்(11.09.2025) இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்ட நபர் பாணந்துறை, அலுபோமுல்லவில் வசிக்கும் ஒரு தொழிலதிபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐஸ் போதைப்பொருள்
பாகிஸ்தானில் இருந்து ஐஸ் என்ற போதைப்பொருள் உற்பத்திக்காக கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 50,000 கிலோ எடையுள்ள மூலப்பொருட்களின் ஒரு பகுதி இவ்வாறு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட டிப்பர் வாகனத்தின் உரிமையாளரிடமிருந்து ரூ.20,000 தினசரி வாடகை அடிப்படையில் ஒரு நபர் வாகனத்தை பெற்றுக்கொண்ட்தாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி வாகனத்தை வாடகைக்கு பெற்றுக்கொண்ட நபர் பின்னர் அதை ஒரு ஓட்டுநரிடம் கொடுத்து மித்தெனியவில் உள்ள தலாவ பகுதிக்கு கொண்டு சென்றதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தோட்டத்தில் இருந்த மூலப்பொருட்கள் டிப்பர் வாகனத்தில் ஏற்றப்பட்டு நுவரெலியா பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
குற்றப் புலனாய்வுப் பிரிவு
இருப்பினும், வாகனத்தை நுவரெலியாவில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் நிறுத்தி வைக்க முயன்றபோது, உரிமையாளர் சந்தேகத்தின் பேரில் அதை அனுமதிக்கவில்லை என்று பொலிஸார் கூறியுள்ளனர்.
சில நாட்களுக்குப் பிறகு வாகனம் பழுதுபார்க்கப்பட்டு கந்தானையில் உள்ள தொடருந்து நிலைய வீதிக்கு அருகில் உள்ள ஒரு வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது.
இதற்கிடையில், இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மித்தெனியவில் உள்ள தலாவ பகுதியில் வசிக்கும் முன்னாள் பொலிஸ் அதிகாரி ஒருவரையும் கைது செய்ய முயற்சிப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த மோசடியில் ஈடுபட்ட டிப்பர் வாகனத்தின் சாரதியும் சில நாட்களுக்கு முன்பு களுத்துறை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்ட்தாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




