முல்லைத்தீவில் பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய மூவர் கைது
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபர் உட்பட மூவர் நேற்று(16) ஒட்டுசுட்டான் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

| நாடளாவிய ரீதியில் போதை மாத்திரைகளுடன் பலர் கைது |
திருடப்பட்டவை குறித்து முறைப்பாடு
கடந்த 15ஆம் திகதி ஒட்டுசுட்டான் சிவநகர் கிராமத்தில் யானை வேலிக்கு பொருத்தப்பட்டிருந்த சோலர் ஒன்றும், வீட்டில் இருந்த தண்ணீர் மோட்டர் ஒன்றும், வீட்டில் இருந்த மிதிவண்டி ஒன்றும் திருடப்பட்டுள்ளதாக மூன்று முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.
பொலிஸாரால் மீட்பு

இந்த நிலையில் ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மாங்குளம் பொலிஸ் பிரிவின் கீழ் களவாடப்பட்ட இரண்டு தண்ணீர் மோட்டர்கள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளன.
மேலும், களவாடப்பட்ட சான்றுபொருட்களையும் சந்தேகநபர்களையும் நீதிமன்றில்
முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
திருட்டு விஷயம் தெரிந்ததும் வானதி சொன்ன விஷயம், நிலா சோழனுக்கு சொன்ன சந்தோஷ செய்தி... அய்யனார் துணை சீரியல் Cineulagam
முடிவுக்கு வரும் சக்திவேல் சீரியல், திங்கள் முதல் மாறப்போகும் விஜய் சீரியல்களின் நேரம்... முழு விவரம் இதோ Cineulagam
ஆலிவர் பின்னால் இருக்கும் அந்த நபர் இவர்தானா, அடுத்த வில்லன் ரெடி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
உக்ரைன் வான் பரப்பிற்குள் பட்டப்பகலில் நுழைந்த 400 ட்ரோன்கள்: புதிய உத்தியை கையில் எடுக்கும் ரஷ்யா News Lankasri