நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவருக்கு விடுக்கப்பட்டுள்ள மரண அச்சுறுத்தல்! சபையில் முறைப்பாடு
வசந்த யாப்பா பண்டார, திலக் ராஜபக்ச மற்றும் சமிந்த விஜேசிறி ஆகிய மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக இன்று முறையிட்டனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொலைமிரட்டல் விடுத்து ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு வாக்குகள் சேகரிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
எனவே, புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக அண்மையில் நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பின் நியாயத்தன்மை குறித்து கேள்வி எழுப்ப வேண்டியுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் விஜேசிறி தெரிவித்துள்ளார்.
விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
இந்த விவகாரம் குறித்து சபாநாயகர் விசாரணை நடத்தி, புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்காக நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட தேர்தல் முறையானதா இல்லையா என்பதை சபைக்கு தெரிவிக்க வேண்டும்," என்று அவர் கோரிக்கை விடுத்தார்.
இந்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் யாப்பா பண்டார, தமக்கு இனந்தெரியாத அழைப்பாளர் ஒருவர், தொலைபேசியில் அழைத்து, நாடாளுமன்றத்தில் இருந்து விலக வேண்டும். இல்லையேல் மரணத்தை எதிர்கொள்ள வேண்டும் என்று அச்சுறுத்தியதாக கூறினார்.
இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்கள் குறித்து
விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜபக்ச
வலியுறுத்தினார்