மாயமான மூன்று கடற்றொழிலாளர்கள் - தேடுதல் பணியை தீவிரப்படுத்த கோரிக்கை!
“நம்பிக்கையைத் தளரவிடாது, தங்கள் உறவுகள் மூவரும் உயிருடன் உள்ளார்கள்” என முல்லைத்தீவு - மாத்தளன் பகுதியிலிருந்து கடந்த 26ஆம் திகதி கடற்றொழிலுக்குச்சென்று காணாமல் போன கடற்றொழிலாளர்களின் உறவினர்களிடம் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
காணாமல் போன மூன்று பேரையும் தேடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கடற்றொழில் அமைச்சர், முல்லைத்தீவு மாவட்டசெயலாளர், முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு உள்ளிட்ட தரப்பினரிடம் ஏற்கனவே வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதற்கமைய கடற்படையினர் மற்றும் விமானப்படையினர் உள்ளிட்ட தரப்பினர் காணமல் போன மூன்று பேரையும் தேடுவதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்திருந்ததாக அறிய முடிகின்றது.
கடற்றொழிலாளர்கள் மாயம்
அத்துடன், மாத்தளன் கடற்றொழிலாளர் சங்கம் மற்றும் இளைஞர்களின் உதவியுடன் எட்டுப்படகுகள் 70 கிலோமீற்றர் வரையில் கடலுக்குள் சென்று தேடுதலில் ஈடுபட்டிருந்தனர்.

என்னைப் பொறுத்தவரை அவர்கள் திரும்பி வருவார்கள். அவர்கள் மூவரும் திரும்பி வர வேண்டும் என்ற வேண்டுதலுடன் கடற்றொழிலாளர் சங்கத்தினரும், இளைஞர்களும் தேடுதல் பணிகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.
எனவே மூவரையும் பறிகொடுத்துவிட்டோம் என நினைத்து உறவுகள் கவலைகொள்ள வேண்டாம். மூவரும் இருக்கின்றார்கள் என நினைத்துக்கொள்ளுங்கள். உறவுகள் மூவரும் இருக்கின்றார்கள் என்ற நம்பிக்கையுடனேயே மீண்டும் தேடுதல் பணி முன்னெடுக்கப்பட வேண்டும். ஆகவே நம்பிக்கையைத் தளரவிடாது, தங்கள் உறவுகள் மூவரும் உயிருடன் உள்ளார்கள் என்ற நம்பிக்கையுடன் இருங்கள் என்றார்.
லொட்டரியில் வென்ற 1 மில்லியன் பவுண்டு - அண்டை வீட்டாரின் கனவை நிறைவேற்றிய பிரித்தானிய பெண் News Lankasri
தமிழ்நாடு, ஆந்திராவில் ரூ. 100 கோடிக்கு மேல் வசூல்... கர்நாடகாவில் ஜெயிலர் 2 எவ்வளவு வசூல் தெரியுமா? Cineulagam
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான்: அடுத்த 100 நாட்களில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடிவரும்! Manithan
பாக்ஸ் ஆபிஸ்- ஆந்திராவில் முதல் தமிழ் திரைப்படம் செய்துள்ள சாதனை... ரஜினியின் ஜெயிலர் 2 செய்த ஆல்டைம் ரெக்கார்ட் Cineulagam