தென்னிலங்கையில் சுற்றுலாப் பயணிக்கு நேர்ந்த அவலம் - 21 வயது இளைஞர் அதிரடியாக கைது!
தென்னிலங்கையின் ருமஸ்ஸலா பகுதியில் உள்ள ஜங்கிள் பீச்சுக்கு சுற்றுலா சென்ற 20 வயதுடைய பிரான்ஸ் நாட்டுப் பெண் ஒருவரை தவறான நடத்தைக்குட்படுத்த முயற்சித்த 21 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
இலங்கையின் பிரபலமான சுற்றுலாத்தளமாக பார்க்கப்படும் காலி - ருமஸ்ஸலா பகுதியில் உள்ள ஜங்கிள் பீச்சுக்கு சென்ற சுற்றுலா பயணி ஒருவரை, ராகம பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தவறான நடத்தைக்கு உட்படுத்த முயற்சித்துள்ளார்.
21 வயது இளைஞர் கைது
சம்பவம் தொடர்பில் கிடைத்த தகவலையடுத்து உனவட்டுன சுற்றுலா காவல் பிரிவினர் 21 வயது சந்தேகநபரைக் கைது செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட பிரான்ஸ் நாட்டுப் பெண்ணின் பாதுகாப்பை உறுதிப்படுத்திய பின்னர், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சந்தேகநபர் ஹபராதுவ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், சந்தேகநபர் இன்று(01.11.2026) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
YOU MAY LIKE THIS