முல்லைத்தீவில் மின்னல் தாக்கியதில் மூவர் பலி!
முல்லைத்தீவு − தண்ணிமுறிப்பு பகுதியில் மின்னல் தாக்கி 3 விவசாயிகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
குமுழமுனைக் கிராமத்தினைச் சேர்ந்த இருவர், வற்றாப்பளைக் கிராமத்தினைச் சேர்ந்தவர் உட்பட விவசாயிகள் மூவர் தண்ணிமுறிப்பு 3ம் கண்டம் பகுதியில் வயலில் வேலையில் ஈடுபட்டிருந்தனர்.
இரவாகியும் அவர்கள் வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள் அவர்களைத் தேடிச் சென்றபோது அவர்கள் மூவரும் சடலமாக காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த மூன்று விவசாயிகளின் சடலங்களும் அதே விவசாய நிலத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

சிலை அரசியல் : அறிவும் செயலும் 1 நாள் முன்

எதிர்நீச்சல் விசாலாட்சி அம்மாவா இது? பாவாடை தாவணியில் சொக்க வைக்கும் அழகி.. வைரலாகும் புகைப்படம் Manithan

தங்கை திருமணத்தில் 8 கோடிக்கு வரதட்சணை வழங்கிய சகோதரர்கள்! சீர் வரிசையை பார்த்து வியந்த ஊர்மக்கள் News Lankasri
