யாழ் பல்கலையில் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் மூவர் பேராசிரியராக பதவி உயர்வு
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இரசாயனவியல் துறை, பல்துறைக் கற்கைகள் துறை ஆகிய துறைகளின் துறைத்தலைவர்கள் உட்பட சிரேஷ்ட விரிவுரையாளர்கள் மூன்று பேர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.
விஞ்ஞான பீடத்தின் இரசாயனவியல் துறைத் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி ஜசோதா பிரபாகர், பொறியியல் பீடத்தின் பல்துறைக் கற்கைகள் துறைத் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான பத்மநாதன் கதிர்காமநாதன் மற்றும் கலைப் பீடத்தின் ஆங்கில மொழி கற்பித்தல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி திருநாவுக்கரசு கருணாகரன் ஆகியோரைப் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்துவதற்குப் பல்கலைக்கழகப் பேரவை நேற்று(13.03.2026) ஒப்புதல் வழங்கியுள்ளது.
பேராசிரியர்களாகப் பதவி உயர்வு
பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தக் கூட்டம் நேற்று (13) துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் நடைபெற்றது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுச் சுற்றறிக்கை நியமங்களுக்கு அமையத் திறமை அடிப்படையில் பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களின் மதிப்பீடு மற்றும் நேர்முகத் தேர்வு முடிவுகள் பேரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.

இதன்படி, இரசாயனவியல் துறைத் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான ஜசோதா பிரபாகர் இரசாயனவியலில் பேராசிரியராகவும், பொறியியல் பீடத்தின் பல்துறைக் கற்கைகள் துறைத் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான பத்மநாதன் கதிர்காமநாதன் பொறியியற் கணிதவியலில் பேராசிரியராகவும், ஆங்கில மொழி கற்பித்தல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி திருநாவுக்கரசு கருணாகரன் ஆங்கில மொழி கற்பித்தலில் பேராசிரியராகவும் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.
புதிய கம்பெனிக்கு பார்ட்னர் ஆன நிலா, ரூ. 5 லட்சம் ரெடியானதா, ஹேப்பி எபிசோட்... அய்யனார் துணை சீரியல் Cineulagam
சுரங்கப்பாதை முழுவதும் ஆயுதங்கள்! ஈரான் ரகசியமாக கட்டியெழுப்பிய மிசைல் நகரம்: வீடியோ ஆதாரம் News Lankasri
குணசேகரன் பிளானுக்கு இடையில் அறிவுக்கரசி செய்த பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri