பாதுகாப்பு இல்லத்திலிருந்து தப்பியோடிய சிறுமிகள்
பாணந்துறை, வாலான பிரதேசத்தில் இயங்கி வரும் சிறுமிகள் பாதுகாப்பு இல்லத்தில் இருந்து மூன்று சிறுமிகள் தப்பிச் சென்றுள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவமானது நேற்று(01.11.2023) இடம்பெற்றுள்ளது.
தப்பிச் சென்ற மூன்று சிறுமிகளும் 13, 14 மற்றும் 16 வயதுடையவர்கள் எனவும், அவர்கள் பேருவளை, பிபில மற்றும் ராகம பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸ் விசாரணை
சிறுவர் இல்லத்தின் பொறுப்பதிகாரி அளித்த தகவலின் அடிப்படையில் விசாரணை தொடங்கியுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

சிறுமிகள் இல்லத்தின் பொறுப்பதிகாரி அவர்கள் பயன்படுத்திய கையடக்க தொலைபேசிகளை கண்டெடுத்ததாகவும், உரையாடிய பின்னர் கைத்தொலைபேசிகளை தரையில் வீசிவிட்டு அவர்கள் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
துப்பாக்கி முனையில் 16 வயது சிறுவனை உறவுக்கு..அதிரவைத்த வழக்கில் இளம் பெண்ணிற்கு பிடியாணை News Lankasri
லொறிக்குள் பதுங்கியிருந்த புலம்பெயர் மக்கள்... பிரித்தானிய சாலை ஒன்றில் மடக்கிய பொலிசார் News Lankasri