தேர்தல் தொடர்பில் ஜனாதிபதியிடம் மொட்டு கட்சி முன்வைக்கவுள்ள கோரிக்கை
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான யோசனையை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியு்ள்ளது.
இது தொடர்பில் கட்சிக்குள் பல பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டின் மக்கள் அபிப்பிராயத்தை துல்லியமாக பரிசோதிக்க பொதுத் தேர்தலை பயன்படுத்த முடியும் எனவும் அதன் பெறுபேற்றின் அடிப்படையில் ஜனாதிபதி தீர்மானம் எடுக்க வேண்டும் எனவும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வரவு செலவு திட்டம் தொடர்பில் ஆராய்வு
இந்த கலந்துரையாடலில் நடைபெறவுள்ள வரவு செலவுத்திட்டம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளதுடன் வரவு செலவு திட்டத்தை கட்சி ரீதியில் நீண்டகாலமாக ஆராய்ந்த பின்னர் தீர்மானம் எடுப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், வரவு செலவுத் திட்டத்தைத் தோற்கடிப்பது தொடர்பில் இதுவரை எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.