இஸ்ரேலை இணைய வரைபடத்திலிருந்து நீக்கிய சீனா
சீனாவில் பிரபல்யமான பைடு மற்றும் அலிபாபா நிறுவனங்களின் இணைய வரைபடத்தில் இஸ்ரேல் பெயரை நீக்கியுள்ளன.
பாலஸ்தீனத்தை ஆதாரிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இஸ்ரேல்- ஹமாஸ் இடையே 20இற்கும் மேற்பட்ட நாட்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது.
இந்நிலையில், சீனாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களான அலிபாபா மற்றும் பைடு தங்களின் இணைய வரைபடத்தில் இருந்து இஸ்ரேலின் பெயரை நீக்கியுள்ளன.
இஸ்ரேலின் எல்லைகள்
பாலஸ்தீனத்திற்கு ஆதரவான சீனாவின் நிலைப்பாட்டை ஆதரிக்கும் வகையில் சீன நிறுவங்கள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
???? China has REMOVED ISRAEL from its online maps, including Baidu and Alibaba! pic.twitter.com/UwcD86N3Pz
— Hend F Q (@LadyVelvet_HFQ) October 31, 2023
இருப்பினும், பைடுவின் சீன மொழியில் உள்ள இணைய வரைபடத்தில் சர்வதேச நிர்ணயிக்கப்பட்ட அளவீடுகளின்படி இஸ்ரேலின் எல்லைகள் குறிக்கப்பட்டிருந்தாலும் அந்தப் பகுதியில் இஸ்ரேல் என்கிற பெயர் குறிப்பிடப்படவில்லை.
இது குறித்து அலிபாபா மற்றும் பைடு நிறுவனங்கள் இதுவரை எந்த பதிலும் வெளியிடவில்லை. இஸ்ரேல்-ஹமாஸ் போரில் யாருக்கும் ஆதரவு தெரிவிக்காத சீனா, பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அளிப்பதே தீர்வு எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.