மழையினால் யாழில் மூன்று குடும்பங்கள் பாதிப்பு..!
மழை அனர்த்தம் காரணமாக யாழ்ப்பாணத்தில் (Jaffna) மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 13பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
அந்தவகையில், பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/401 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த நால்வரும், கரவெட்டி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/356 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த ஐவரும், வேலணை பிரதேச செயலர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த நால்வரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் கோப்பாய் பிரதே செயலர் பிரிவிற்குட்பட்ட வீடு மீது மரம் முறிந்து விழுந்ததில் வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், அடிப்படை கட்டமைப்பு ஒன்றும் மின்னல் தாக்குதலால் சேதமடைந்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


ஈரான் - அமெரிக்க போரில் புதிய திருப்பம்! போர்க்களத்தில் இறங்கப்போகும் உக்ரைன் ரோபோக்கள் (காணொளி) News Lankasri
Making Video: கூடவே வாழ்ந்த மாதிரி பேசுறீங்க... சுதா கொங்கராவிற்கு பதிலடி கொடுத்த சிவகார்த்திகேயன்! Manithan