பருத்தித்துறை கடலில் 237.5 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் மூவர் கைது
யாழ்ப்பாணம் -பருத்தித்துறை வடக்கு கடலில் ஒரு டிங்கி படகு மற்றும் 237.5 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் மூவரை இன்று கைது செய்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
பருத்தித்துறைக்கு வடக்கே உள்ள கடலில் இன்று அதிகாலை கடற்படையினர் மேற்கொண்ட கண்காணிப்பு நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான டிங்கி கப்பல் ஒன்று , கரையை நோக்கி வருவது கண்டுபிடிக்கப்பட்டது.
குறித்த படகில் கேரள கஞ்சா இரண்டு சாக்குகளில் கொண்டு செல்லப்பட்ட நிலையில், மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன்,சந்தேகநபர்களிடம் மேற்கொண்ட விசாரனையின் போது கடலில் வீசப்பட்ட மேலும் ஒரு தொகுதி கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
இதன்படி 08 சாக்குகளில் அடைக்கப்பட்டுள்ள 237 கிலோ மற்றும் 500 கிராம் ஈரமான கஞ்சாவை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 28 ,29 வயதுக்குட்பட்ட பருத்தித்துறை மற்றும் அச்சுவேலி குடியிருப்பாளர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை மேலதிக விசாரனைக்காக காங்கேசன்துரை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.




இன முரண்பாட்டின் உச்சமே தமிழ் சிங்கள கிறிஸ்தவ திருச்சபைகளின் பிளவு 22 மணி நேரம் முன்
ரிஷபத்தில் செவ்வாய் பெயர்ச்சி : இந்த ராசியினர் வாழ்வில் தொட்டதெல்லாம் பொன்னாகும்! உங்க ராசியும் இருக்கா? Manithan