ரணில் தலைமையில் ஐக்கிய தேசியக்கட்சியின் செயற்குழு கூட்டம்
ஐக்கிய தேசியக் கட்சியை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில் கட்சியின் செயற்குழு கூட்டம் நேற்று (11) முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்றது.
தற்போதைய அரசியல் சூழலுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் பதில் நடவடிக்கைகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து, கட்சியின் செயற்குழு உறுப்பினர்களில் பெரும்பான்மையானோர் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் விரிவான கலந்துரையாடல் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கட்சி அமைப்பை வலுப்படுத்தவும் மறுசீரமைக்கவும் செயல்படுத்தப்பட வேண்டிய திட்டம் தொடர்பாக இக்கூட்டத்தில் பல முக்கிய முன்மொழிவுகளும் யோசனைகளும் முன்வைக்கப்பட்டன.
கலந்துரையாடல்
மேலும், எதிர்காலத்தில் பிற அரசியல் கட்சிகள், சக்திகள் மற்றும் சிவில் அமைப்புகளுடன் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது குறித்தும் செயற்குழு உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

கூட்டத்தில் உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வரவிருக்கும் அரசியல் சவால்களை எதிர்கொள்ள, பல்வேறு சக்திகள் தனித்தனியாகச் செயல்படுவதற்குப் பதிலாக ஒன்றிணைய வேண்டியதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
கட்சியின் பொதுச் செயலாளர், சட்டத்தரணி தலதா அதுகோரள, கட்சியின் ஒழுங்கு விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு முரணாகச் செயல்பட்ட உள்ளூராட்சி நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் தொடர்பான விடயத்தை அதன்போது செயற்குழுவிடம் முன்வைத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இன முரண்பாட்டின் உச்சமே தமிழ் சிங்கள கிறிஸ்தவ திருச்சபைகளின் பிளவு 13 மணி நேரம் முன்
பாரதிராஜாவுடன் கடைசி சந்திப்பு: நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்த சினேகன் - கன்னிகா - வைரல் காணொளி Manithan
தன்னிடம் எக்கச்சக்கமான நகை இருப்பதாக சமூக ஊடகங்களில் பெருமையடித்துக்கொண்ட பெண்: நிகழ்ந்த துயரம் News Lankasri