அரச பணத்தில் அண்ணனின் புகைப்படம் பதித்த டீசெர்ட்டுக்களை அச்சிட்ட வழக்கில் சிக்கிய பசில்
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரான பசில் ராஜபக்சவுக்கு (Basil Rajapaksa) எதிராக பொதுப்பணத்தை தனிப்பட்ட தேவைக்கு பயன்படுத்திய குற்றச்சாட்டில் வழக்கு கடந்த காலங்களில் தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது, அரசுக்கு சொந்தமான ரூபாய் 29 மில்லியனுக்கும் அதிக பொதுப் பணத்தைப் பயன்படுத்தி, அதில் தனது அண்ணனான முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புகைப்படம் அச்சிடப்பட்ட டி-ஷர்ட்டுகள் (T-shirts), நாட்காட்டிகள் மற்றும் பைகளைத் தயாரித்து தேர்தல் பிரசாரத்திற்காக விநியோகித்தனர் என்பதாகும்.
இலங்கையில் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு, கடந்த காலங்களில் தள்ளுபடி செய்யப்பட்ட அல்லது கிடப்பில் போடப்பட்ட அரசியல்வாதிகளின் ஊழல் வழக்குகள் அனைத்தும் மீண்டும் சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் கையில் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரான பசில் ராஜபக்ச மீதான குற்றச்சாட்டு தொடர்பில் எதிராக தற்போதைய அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
இவ்விடயங்கள் குறித்து விரிவாக ஆராய்கின்றது நியூஸ் இன்சைக்ட் நிகழ்ச்சி,
கருணா குழுவின் முக்கியஸ்தர் படுகொலை - ஒட்டுமொத்த தமிழர்களை காக்க அந்தவொரு இளைஞர் எடுத்த விபரீத முடிவு..!
இன முரண்பாட்டின் உச்சமே தமிழ் சிங்கள கிறிஸ்தவ திருச்சபைகளின் பிளவு 16 மணி நேரம் முன்
இன்று இரவு., கார்க் தீவு, எண்ணெய் வளங்களை கைப்பற்றுவோம்- ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri
பாரதிராஜாவுடன் கடைசி சந்திப்பு: நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்த சினேகன் - கன்னிகா - வைரல் காணொளி Manithan