உடலிலிருந்து தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட நபர் - மூவர் கைது
அம்பலாந்தோட்டை, மாமடல தெற்கு, போகுடுயாய பகுதியில் நபர் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திங்கட்கிழமை (11) இரவு வீட்டிற்குள் புகுந்த மூவர் ஒருவரை கொலை செய்த பின்னர், அவரது தலையை உடலிலிருந்து துண்டித்து மாமடல சந்தியில் உள்ள சிலையில் வைக்கப்பட்டதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.
கொலைக்கான காரணம்
இந்த கொலை நடந்த நேரத்தில், உயிரிழந்த நபரின் குழந்தைகள், மனைவி மற்றும் மாமனாரும் வீட்டில் இருந்துள்ளனர்.
சந்தேகநபர்களுடனான மோதலில் காயமடைந்த அவரது மாமனாரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன்போது மூன்று பிள்ளைகளின் தந்தையான 34 வயதுடைய வீரசேகர அரச்சிங்கே லக்மல் சந்தருவன் என்பவரே உயிரிழந்துள்ளதுடன், அவரது பிறந்தநாளும் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டு மாமடல பகுதியில் கள்ளச்சாராய கடத்தல் தொடர்பாக இடம்பெற்ற தகராறு காரணமாக வீடொன்றுக்குள் புகுந்து மூவரை படுகொலை செய்த வழக்கின் பிரதான சந்தேகநபராக உயிரிழந்த நபர் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கொலை செய்யப்பட்ட நபர், கடந்த மார்ச் 30 ஆம் திகதி பிணையில் வெளியே வந்துள்ளார்.
முக்கொலைக்கு பழிவாங்கும் நோக்கில் இந்த நபர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள கபில சந்திரசேனவின் மரணம்! சிக்கிய போலி ஆவணங்கள் - பொலிஸார் வெளியிட்ட தகவல்