இலங்கைக்கு கடத்தப்படவிருந்த கஞ்சாவுடன் மூவர் கைது
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக தயார் நிலை வைக்கப்பட்டிருந்த 364 கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்
நாகபட்டினம், வேட்டைக்காரனிருப்பு, நாலுவேதபதி பகுதியிலேயே இந்த கஞ்சா நேற்று (18.2.2024) கைப்பற்றப்பட்டுள்ளது.
அத்துடன் அவர்கள் பயன்படுத்திய பைபர் படகொன்றையும் நாகபட்டினம் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இதன்போது அக்கரைப்பேட்டை, நாகபட்டினம், வேட்டைக்காரனிருப்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ். சுன்னாகம் பகுதியில் கஞ்சா மீட்பு
சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீடு ஒன்றில் இருந்து நேற்றிரவு இரண்டு கிலோ கேரளக் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
இதன்போது சந்தேகநபர் ஒராவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சுன்னாகம் பொலிஸாரிம் ஒப்படைக்கப்பட்டார்.
அவரை மல்லாகம் நீதிமன்றத்தில்
முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





தயவுசெய்து இந்த சீரியலை முடித்துவிடுங்கள், கதறும் சன் டிவி சீரியல் ரசிகர்கள்... அப்படி என்ன தொடர் Cineulagam

திருமண மண்டபத்தில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளிவந்தது.. ஷாக்கில் குடும்பம், சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

இந்தியக் கடற்படைக்கு ரூ.1 இலட்சம் கோடி மதிப்பில் 9 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்., CCS ஒப்புதல் விரைவில் News Lankasri
