யாழில் பெரும் எண்ணிக்கையிலான தொலைபேசிகளை திருடிய மூவர் கைது (Video)
யாழ்ப்பாணத்தில் தொலைபேசிகளை திருடிய மூவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் கடந்த மூன்று மாதங்களாக தொலைபேசிகளை திருடியுள்ளார்கள் என தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்களிடமிருந்து சுமார் 15 லட்சம் ரூபாய் பெறுமதியான 43 தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன என தலைமையக பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள்
நாவற்குழி மற்றும் அரியாலையை சேர்ந்த 23, 24 மற்றும் 27 வயதுடைய சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
சுமார் 3 லட்சம் ரூபாய் பெறுமதியான ஐ.போன் மற்றும் கைது செய்யப்பட்டவர்களின் தொலைபேசிகள் உட்பட 45 தொலைபேசிகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேகநபர்களின் வாக்குமூலம்
போதைப்பொருளுக்கு அடிமையாகியதால் பேருந்துகளில் ஏறி பயணிகளிடம் தொலைபேசிகளை திருடி தப்பிப்பதாக சந்தேக நபர்கள் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இடம்பெற்ற தொலைபேசி திருட்டுகளிலும் இவர்களுக்கு தொடர்புண்டு என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
மக்களுக்கான அறிவிப்பு
தொலைபேசி திருடப்பட்டிருந்தால், உரியவர்கள் யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலையத்தில் வந்து அடையாளம் காட்ட முடியும் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
யாழில் ஆரோக்கிய நகரம் செயற்திட்டம் ஆரம்பம் |