மட்டக்களப்பில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட மூவர் கைது(Photos)
மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள பிறந்துறைச்சேனையில் போதை பொருள் வியாபாரிகளது வீட்டை முற்றுகையிட்ட விசேட அதிரடிப்படையினர் 3 சந்தேக நபர்களை கைதுசெய்துள்ளனர்.
குறித்த சந்தேக நபர்களை நேற்று(02.01.2024) இரவு விசேட அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணை
இதன் போது 980 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 40 மில்லிகிராம் ஹெரோயினும் 12 இலட்சத்து 22 ஆயிரத்து 300 ரூபாவும் இரண்டு கையடக்க தொலைபேசிகளையும் மீட்டு ஒப்படைத்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் கூறியுள்ளனர்.

விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றினையடுத்து விசேட அதிரடிப்படைத் தளபதி சிரேஸ்ர பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தரவின் ஆலோசனையின் கீழ் அம்பாறை மட்டக்களப்பு பிராந்திய கட்டளைத் தளபதி உதவிப் பொலிஸ் பணிப்பாளர் வாவிடவிதானவின் வழிகாட்டலில் வாழைச்சேனை கடதாசி ஆலை முகாம் பொறுப்பதிகாரி கே.ஜி. லக்கல்குமார தலைமையிலான விசேட அதிரடிப்படையினரின் தேடுதல் நடவடிக்கையிலே சந்தேக நபர்கள் கைதாகியுள்ளனர்.

இதில் கைது செய்யப்பட்வர்களையும் சான்று பொருட்களையும் விசேட அதிரடிப் படையினர் தம்மிடம் ஒப்படைத்துள்ளதாகவும் இவர்களை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 3 மணி நேரம் முன்
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam