யாழில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மூவர் கைது
பயணத்தடை வேளையில் யாழ். நகரில் திருட்டில் ஈடுபட்ட மூவர் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
பயணத் தடை வேளையில் யாழ். குடாநாட்டின் நகரப் பகுதிகளில் ஆனைப்பந்தி, நாவலர் வீதி, கோவில் வீதி பகுதிகளில் உள்ள மூடப்பட்டிருந்த கடைகளை உடைத்து தொலைக்காட்சிப் பெட்டிகள், சைக்கிள்கள், மின்சாதனப் பொருட்கள், விலை உயர்ந்த உணவுப் பொருட்கள், பிஸ்கட் வகைகள், பால் பைக்கற்றுக்கள் எனப் பெறுமதியான பொருட்கள் திருடப்பட்ட நிலையில் குறித்த கடைகளின் உரிமையாளர்களால் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டன.
இந்நிலையில், யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து களவாடப்பட்ட பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த சந்தேகநபர்கள் விசாரணைகளின் பின்னர் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவுள்ளார்கள். கைதுசெய்யப்பட்டவர்கள் குருநகர் மற்றும் நாவற்குழி பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், 20 தொடக்கம் 30 வயதுடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப் பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ்
பரிசோதகர் பிரான்சிஸ் தலைமையிலான மாவட்ட குற்றத்தடுப்புப் பொலிஸ் பிரிவினரால்
திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் மிக விரைவில் கைதுசெய்யப்பட்டுள்ளமை
குறிப்பிடத்தக்கது.
பல்லவன் யார் என்ற பல வருட ரகசியத்தை கூறிய நடேசன், ஷாக்கில் நிலா... அய்யனார் துணை எமோஷ்னல் எபிசோட் Cineulagam
கெய்ர் ஸ்டார்மர் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்படுவது உறுதி: கடுமையாகத் தாக்கிய பிரபலம் News Lankasri