டிட்வா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட தொழில் முயற்சியாளர்களுக்கு முக்கிய தகவல்
டிட்வா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட தொழில்முயற்சியாளர்களுக்கு இருபத்தி ஐந்து மில்லியன் ரூபா வரையான இலகு கடன்வசதியொன்றை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
டிட்வா சூறாவளிப் புயல் காரணமாக ஏற்பட்ட அனர்த்த நிலைமையினால் பாதிக்கப்பட்ட தொழில்முயற்சிகளை மீளக் கட்டியெழுப்பும் நோக்குடன் மேற்குறித்த அனர்த்த சலுகைக் கடன் திட்டத்தை முன்னெடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
சலுகைக் காலம்
அதன் காரணமாக அனர்த்த நிலைமையினால் பாதிக்கப்பட்ட தொழில்முயற்சியாளர்களுக்கு ஆறுமாத சலுகைக் காலத்துடன் மூன்று வருடங்களுக்குள் செலுத்தி முடிக்கத்தக்கதாக குறித்த சலுகைக் கடன் வழங்கப்படவுள்ளது.

சிறு மற்றும் குறு தொழில்முயற்சியாளர்களுக்கு ஆகக்கூடியது, இரண்டு இலட்சத்தி ஐம்பதாயிரம் ரூபா வரையிலும், நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கு ஆகக்கூடியது ஒரு மில்லியன் ரூபா வரையிலும், பாரியளவிலான தொழில் முயற்சியாளர்களுக்கு ஆகக்கூடிய தொகையாக 25 மில்லியன் ரூபா வரையிலும் இத்திட்டத்தின் கீழ் சலுகைக்கடனாக வழங்கப்படவுள்ளது.
குறித்த கடன் தொகைக்கு வருடாந்தம் மூன்று வீதம் அளவிலான குறைந்த வட்டி மட்டுமே அறவிடப்படவுள்ளது. வர்த்தக வங்கிகள் மற்றும் அனுமதி பெற்ற ஏனைய வங்கிகள் ஊடாக குறித்த கடன் தொகை வழங்கப்படவுள்ளதுடன், அதற்காக ஐந்து பில்லியன் ரூபா அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 1ஆம் திகதிக்கு முன் இந்த 9 பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு ஒரு அவசர செய்தி News Lankasri
கடை திறக்க போராடும் ஜனனி, ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த நடிகை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
பல்லவன் யார் என்ற பல வருட ரகசியத்தை கூறிய நடேசன், ஷாக்கில் நிலா... அய்யனார் துணை எமோஷ்னல் எபிசோட் Cineulagam