பொலிஸாரிடம் வேலன் சுவாமிகளின் ஆபத்தான திக்.. திக்.. நிமிடங்கள்! முதன் முறையாக அம்பலமாகும் உண்மைகள்
தையிட்டி விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட தம்மை பொலிஸார் தாக்கியமை ஒரு கொலை முயற்சி என வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார்.
லங்காசிறி ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கைப் பொலிஸாரைப் பொறுத்தவரையில் நான் ஒரு மதகுரு என்று நன்றாகவே தெரியும்.
இது எல்லாம் தெரிந்து கொண்டு தான் என்னைப் பலவந்தமாக தாக்கி கைது செய்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட போது வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபடுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.இதனையடுத்து நாம் வீதிக்கு அருகில் நின்று போராட்டம் செய்கின்றோம் என்ற போது எம்மைப் பொலிஸார் பலவந்தமாக தள்ளினார்கள்.
இதனையடுத்து நான் ஒதுங்கியிருந்தபோது தெல்லிப்பளை ஓ.எஸ்.ஈ, மற்றும் ஏனைய பொலிஸார் என்னைத் தேடி வந்து கழுத்தில் இருந்த உருத்திராட்சிர மாலையை அறுத்து கழுத்தில் திருகி அடிக்க ஆரம்பித்தனர்.
இதன்போது, எனது கழுத்துப்பகுதிக்கு கையைக் கொடுத்த போது கை நசிந்து அசைக்க இயலாமல் போய்விட்டது.
இந்தநிலையிலே, பொலிஸாரின் இவ்வாறாக செயற்பாடுகளை பார்க்கின்றபோது என்னைக் கொலை செய்ய இவ்வாறு தாக்கியுள்ளனர் எனத் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி,
கடை திறக்க போராடும் ஜனனி, ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த நடிகை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam