சொகுசு காரில் பயணித்த மூவர் போதைப்பொருளுடன் கைது (Photos)
வவுனியாவில் எட்டு கிலோகிராம் கேரள கஞ்சாவினை கடத்திச்சென்ற மூவரைக் கைது செய்துள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழிலிருந்து கண்டி நோக்கிப் பயணித்த சொகுசு காரினை இன்று காலை வவுனியா - ஓமந்தையில் அமைந்துள்ள சோதனை சாவடியில் வழிமறித்த பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் அதில் சோதனைகளை மேற்கொண்டனர்.
இதன்போது குறித்த வாகனத்தில் பொதி செய்து மறைத்து வைக்கப்பட்டிருந்த 8 கிலோகிராம் கேரள கஞ்சாவினை மீட்டதுடன், வாகனத்தை கைப்பற்றில் அதில் பயணித்த குருணாகல் மற்றும் கண்டி பகுதியைச் சேர்ந்த 44, 41, 39 வயதுகளை கொண்ட ஒரு பெண் உட்பட மூவரைக் கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
மீட்கப்பட்ட கஞ்சாவின் பெறுமதி சுமார் 12 லட்சம் ரூபாயாக இருக்கலாம்
என பொலிஸார் தெரிவித்ததுடன், கைது செய்யப்பட்டவர்களை மேலதிக விசாரணைகளின்
பின்னர் நீதிமன்றில் முன்னிறுத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.









இஸ்ரேலுக்கு ஆயுத ஏற்றுமதியை முழுமையாக நிறுத்திய ஜேர்மனி - அரசியல் மாற்றத்திற்கு அடையாளம் News Lankasri

தர்ஷன் திருமணத்திற்கு முன் அநியாயமாக போன ஒரு உயிர், பரபரப்பின் உச்சம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
