யாழில் திருநங்கை கடத்தல் - மூவர் மீது தீவிர விசாரணை
கோவிலுக்கு சென்று விட்டு திரும்பிய திருநங்கையை கடத்திச் சென்ற மூவர் ஊர்காவற்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
கொழும்பினை சேர்ந்த 24 வயதுடைய குறித்த திருநங்கை நேற்று முன்தினம் (10.07.2024) ஊர்காவற்துறை பகுதியில் உள்ள சிவன் ஆலயத்திற்கு சென்று தரிசித்து விட்டு திரும்பி வந்து கொண்டிருந்த வேளை, மூவரடங்கிய குழு அவரை வாகனத்தில் ஏற்றி ஆட்களற்ற பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளது.
முறைப்பாடு
அங்கு அழைத்துச் சென்று, "இங்கே ஏன் வந்தாய்" என அந்த திருநங்கையை வினவியவேளை, ஊர்காவற்துறை பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவரை சந்திக்க வந்ததாக தெரிவித்த அவர், அந்த இளைஞனின் தொலைபேசி இலக்கத்தை குறித்த கும்பலிடம் வழங்கியுள்ளார்.

இதேவேளை, அந்த இளைஞனுக்கு குறித்த கும்பல் தொலைபேசி அழைப்பு மேற்கொண்ட போது, அந்த கும்பலில் இருந்தவரின் தொலைபேசி இலக்கம் குறித்த இளைஞனிடம் ஏற்கனவே இருந்திருந்தது.
இந்நிலையில், இதுகுறித்து ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் செய்யப்பட்டது.
அடையாள அணிவகுப்பு
குறித்த மூவரையும் பொலிஸார் இன்றையதினம் கைது செய்து ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவல்துறை நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், குறித்த சந்தேக நபர்களை இனங்காண்பதற்கு அடையாள அணிவகுப்புக்கு திகதியிடப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சக்தியை கண்டுபிடிக்க போராடும் ஜனனி.. பார்கவியை வீட்டை விட்டு துரத்தும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் புரோமோ வீடியோ Cineulagam
Bigg Boss: கொடுத்த வேலையை பார்க்க வக்கில்ல.... நான் உங்ககிட்ட பேசலை! திவ்யாவை கிளித்தெடுத்த விஜய்சேதுபதி Manithan
களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri
புலம்பெயர்ந்தோருக்கு வேலை கிடையாது... பிள்ளைகளுக்கு பள்ளிகளில் இடம் கிடையாது: ஒரு திடுக் செய்தி News Lankasri