சட்டவிரோதமாக பெற்றோல் வியாபாரத்தில் ஈடுபட்டவர்கள் கைது
மட்டக்களப்பு - கருவப்பங்கேணி
பலசரக்கு கடைகளில் சட்டவிரோதமாக பெற்றோல் வியாபாரத்தில் ஈடுபட்ட மூவரை கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவமானது நேற்று(11) மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள கருவப்பங்கேணி ஊறணி பகுதிகளில் உள்ள பலசரக்கு கடைகளில் இடம்பெற்றுள்ளது.
சட்டவிரோத பெற்றோல் விற்பனை தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கமைய குறித்த பகுதியிலுள்ள பலசரக்கு கடைகளை பொலிஸார் முற்றுகையிட்டனர்.
சட்டவிரோதமாக
பெற்றோல் வியாபாரத்தில் ஈடுபட்ட மூன்று கடை முதலாளிகளை கைது செய்ததுடன் 30 லீற்றர்
பெற்றோலை மீட்டுள்ளனர்.
இதன்போது கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு - காத்தான்குடி
இதனை தொடர்ந்து மட்டக்களப்பு - காத்தான்குடி பகுதியிலும் சட்டவிரோதமாக பெற்றோல் வியாபாரத்தில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யபட்டுள்ளார்
காத்தான்குடி பொலிஸாருக்கு சந்தேகநபர் குறித்து கிடைத்த தகவல் ஒன்றிற்கமைய கடையை முற்றுகையிட்டு சோதனையிட்டனர்.
இதன்போது அங்கு கலன்கலில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 160 லீற்றர் பெற்றோலை மீட்டதுடன், உரிமையாளரையும் கைது செய்துள்ளனர்.
குறித்த கடையில் சட்டவிரோதமாக பெற்றோலை பதுக்கி வைத்து அதிக விலைக்கு பெற்றோல் விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளமை பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதில் கைது செய்யப்பட்டவரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த
நடவடிக்கை எடுத்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.