வெளிநாட்டுத் துப்பாக்கியுடன் பொலிஸாரிடம் சிக்கிய மூவர்
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் காரில் வந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காலி துறைமுகப் பொலிஸ் பிரிவில் உள்ள மீன்பிடித் துறைமுகத்துக்கு அருகில் வைத்து நேற்று(30) புதன்கிழமை மேற்படி மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரகசியத் தகவல்
காலி துறைமுகப் பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்றுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடந்து மற்றும் சீனக்குடா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 45, 54 மற்றும் 56 வயதுடைய நபர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடம் இருந்து வெளிநாட்டுத் துப்பாக்கி, 9 மில்லிமீற்றர் தோட்டாக்கள் 5 என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளைக் காலி துறைமுகப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan