வவுனியாவில் மோதல் சம்பவம் தொடர்பில் மூவர் கைது
வவுனியாவில் ஈபிடிபி கட்சியினருக்கு இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் மூவர் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் இன்று (27.04) மாலை இடம்பெற்றுள்ளது.
வவுனியா கூமாங்குளம் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈழமக்கள் ஜனநாயக கட்சி (ஈபிடிபி) உறுப்பினர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய் தர்க்கம் கைகலப்பாக மாறியதில் கட்சியின் வவுனியா மாவட்ட உதவிச் செயலாளர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள வவுனியா பொலிஸார் தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஈபிடிபி கட்சியைச் சேர்ந்த மூன்று பேரைக் கைது செய்துள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.