அக்கரைப்பற்றில் 5000 ரூபா போலி நாணயத்தாள்களுடன் மூவர் கைது

Sri Lanka Police Eastern Province Crime
By Bavan Oct 20, 2024 03:17 AM GMT
Report

அக்கரைப்பற்று நகர பகுதியில் 5 ஆயிரம் ரூபா 10 போலி நாணயத்தாள்கள், துண்டுபிரசுரங்கள், காணி உறுதிகள், மண் அனுமதிப்பத்திரங்களை கார் ஒன்றில் எடுத்துச் சென்றபோது விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்ட  3 பேரையும் எதிர்வரும் 22 திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த உத்தரவானது அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவானால் நேற்று (19) பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கம் மக்களை நெருக்கடிக்குள் தள்ளும் - ரமேஸ் பத்திரன எச்சரிக்கை

அரசாங்கம் மக்களை நெருக்கடிக்குள் தள்ளும் - ரமேஸ் பத்திரன எச்சரிக்கை

விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல் 

இதுபற்றி தெரியவருவதாவது, திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள தம்பிலுவில் பிரதேசத்தில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தேர்தல் பிரசாரம், சம்பவதினமான நேற்று (19) மாலை இடம்பெற்ற போது, கூட்டத்திற்கு கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் உட்பட கட்சி ஆதரவாளர்கள் சென்று பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். 

அக்கரைப்பற்றில் 5000 ரூபா போலி நாணயத்தாள்களுடன் மூவர் கைது | Three Arrest With Fake Currency Notes Akkaraipattu

இந்த நிலையில் தம்பட்டை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து அக்கரைப்பற்று நகர பகுதியில் விசேட அதிரடிப்படையினர் வீதி கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

இதன்போது குறித்த கட்சியின் தேர்தல் பிரசார நடவடிக்கை முடிவடைந்த வாகனங்கள் மட்டக்களப்பை நோக்கி பிரயாணித்துக் கொண்ட நிலையில் அக்கரைப்பற்று நகர்பகுதியில் குறித்த காரை விசேட அதிரடிப்படையினர் நிறுத்தி சோதனையிட்டனர்.

இதன் போது காரில் இருந்தவர்களிடம் இருந்து 5 ஆயிரம் ரூபா கொண்ட 10 போலி நாணயத்தாள்கள், காணி உறுதிகள், மண் அனுமதிப்பத்திரங்கள், 200 துண்டுப்பிரசுரங்கள், மோதிர அளவு எடுக்கும் கேர்வை என்பவற்றுடன் 3 பேரை கைது செய்ததுடன் காரையும் மீட்டுள்ளனர்.

ஆரம்பகட்ட விசாரணை

இதில் கைது செய்யப்பட்டவர்கள் குறித்த கட்சியின் உறுப்பினர்கள் எனவும் களுவாஞ்சிக்குடியில் கடந்த உள்ளுராட்சி தேர்தலில் வேட்பாளராக போட்டியிட்டவரும் 2015ம் ஆண்டு துப்பாகியுடன் கைது செய்யப்பட்டு பிணையில் வெளிவந்த ஒருவரும், சித்தாண்டி மற்றும் வெலிகந்தை தரப்பளை பிரசேத்தைச் சேர்ந்தவர்கள் என விசேட அதிரடிப்படையினரது ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

அக்கரைப்பற்றில் 5000 ரூபா போலி நாணயத்தாள்களுடன் மூவர் கைது | Three Arrest With Fake Currency Notes Akkaraipattu

இதனையடுதது கைது செய்தவர்களை அக்கரைப்பற்று பொலிஸாரிடம் ஒப்படைத்த நிலையில் இவர்களை நேற்று அக்கரைப்பற்று நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியதையடுத்து, எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை விசேட அதிரடிப்படையினரும் அக்கரைப்பற்று பொலிஸாரும் மேற்கொண்டு வருகின்றனர்.

திருமண வீட்டிற்கு சென்று திரும்பியவர்களுக்கு நேர்ந்த விபரீதம்: பலர் வைத்தியசாலையில் அனுமதி

திருமண வீட்டிற்கு சென்று திரும்பியவர்களுக்கு நேர்ந்த விபரீதம்: பலர் வைத்தியசாலையில் அனுமதி

கொழும்பில் அமைந்துள்ள அமைச்சர் குடியிருப்புகளில் மறைக்கப்பட்டுள்ள இரகசியங்கள்

கொழும்பில் அமைந்துள்ள அமைச்சர் குடியிருப்புகளில் மறைக்கப்பட்டுள்ள இரகசியங்கள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
நன்றி நவிலல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
நன்றி நவிலல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US