மூன்று விபத்துக்களில் மூவர் பரிதாப மரணம்: சிறுமி உட்பட நால்வர் படுகாயம்
நாட்டில் வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற விபத்துக்களில் மூவர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
பொலிஸ் தலைமையகம் இன்று (25.11.2022) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூவர் உயிரிழப்பு
இதற்கமைய அங்கும்புர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாத்தளை – ஒவிலிகந்த பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் 60 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவத்தில் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இதேவேளை, கம்பளை – ஹெம்மாத்தகம பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 78 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவத்தில் பெண்கள் இருவரும், சிறுமி ஒருவரும் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், மொனராகலை பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை
விட்டு விலகி குடைசாய்ந்ததில் சாரதி உயிரிழந்துள்ளார்.
900 கடந்த இறப்பு எண்ணிக்கை... இலங்கை உட்பட பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் மூன்று நாடுகள் News Lankasri